சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலை நிலவரம் நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற போது பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது.முதலீட்டாளர்கள் தற்போது பாதுகாப்பு காரணமாக தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கான எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக குறைவுகளை சந்தித்து வருகிறது, இதன் விளைவாக தங்கத்தின் விலையிலும் தாக்கம் ஏற்படுகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ100 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 7890 ஆகவும், சவரனுக்கு ரூ 800 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 63,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ108 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ108,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

