“சட்டம் குருடு அல்ல” என்ற வாசகத்துடன் புதிய நீதிதேவதையின் சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் திறந்து வைத்தார். நமது நாட்டின் நீதிமன்றத்தில் நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் மூடப்பட்டும், இடது கையில் தராசு மற்றும் வலது கையில் வாளும் இருக்கும். இதன் காரணமாக கூறப்படுவது உயர்ந்தவன் மற்றும் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை பார்க்காமல் நீதி வழங்க வேண்டும் என்பதையும், சரியான எடை வைத்து குற்றங்களுக்கு தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அநீதியை எதிர்த்து நீதி வழங்கும் நீதிதேவதை அடையாளமாக இருந்தது. தற்போது இந்த அடையாளத்தை “சட்டத்தின் முன் சமத்துவம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அக்டோபர் 16 அன்று உச்சநீதிமன்ற நூலகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய நீதிதேவதையின் சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். இப்புதிய நீதிதேவதை சிலை கண்கள் திறந்திற்க்கும் படி அமைந்துள்ளது. மேலும் இடது கையில் தராசும் வலது கையில் அரசியல் சாசன புத்தகமும் உள்ளது. இந்த புதிய சிலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘சட்டம் குருடு அல்ல’ என்ற கருத்து மற்றும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்தும் நீதிமன்றங்களின் அதிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சட்டம் எப்போதும் குருடாக இருக்காது எனவும் அது அனைவரையும் சமமாகக் கருதுகிறது என்பதைக் குறிக்கும் வகையில் நீதி தேவதை கண்ணில் இருந்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது. நமது நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின் அடிப்படையில் நீதி வழங்குவதை வலியுறுத்துகிறது.மேலும் இடது கையில் தராசும் வலது கையில் வாளுக்கு பதிலாக நமது அரசியல் சாசன புத்தகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
