தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பால் விலை உயர்வு ; பொதுமக்கள் அதிர்ச்சி

அரசியல் ஆரோக்கியம் இந்தியா சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு நிறுவனமான ஆவின் மூலமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 84 சதவீதம் தனியார் நிறுவனம் மூலமும், 16 சதவீதம் ஆவின் நிறுவனம் மூலமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆவின் நிறுவனம் மூலம் சராசரியாக நான் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது பால் விலையை தன்னிச்சையாக உயர்த்தி வருகின்றன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் இயங்கும் ருசி பால் நிறுவ னம் இன்று முதல் பால் விலையைலிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் இயங்கும் வேதர், விஜய் மற்றும் யுகா ஆகிய பால் நிறுவனங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து ராஜ், அமிர்தா, ஆதான், சக்ரா, தமிழ், பாரத். எஸ். என்.பி., எஸ்.பி.எஸ். மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய நிறுவனங்கள் நாளை மறுநாள்(சனிக்கிழமை) முதல் பால்விலையைலிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக
தெரிவித்துள்ளனர்.
பால் மட்டுமின்ற தயிர் விலையையும் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நடப்பு ஆண்டில் மட்டும் இது 2ஆவது முறையாகும். இதுகுறித்து நுகர்வோர் உரிமை ஆர்வலர் சடகோபன் கூறுகையில், “தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக தொடர்ந்து பால் விலையை உயர்த்தி வருகின்றன. அரசு நிறுவனமான ஆவின் 16 சதவீதம் மட் டுமே பால் விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை உயர்த்தி வருவதால் தற்போது இவர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் விற்பனை செய்யும் பாலின் தரமும் பரிசோதிக்கப்படுவதில்லை.
எனவே பாலின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் மட்டும் 84 சதவீதம் பால் விற்பனை செய்கின்றன. பொதுமக்களின் கவனம் ஆவின் பால் மீது விழுந்துள்ளது. எனவே ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிகரிக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 25 லட்சம் பேர் ஆவின் பால் பயன்படுத்தினர். தற்போது அதன் எண் ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது” என்றார்.
இதற்கிடையே தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வை பயன்படுத்தி ஆவின் நிறுவனம் ஆரஞ்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்தி அதன் விற்பனையையும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆவின் பால் உற்பத்தியையும், பால்பொருட்களின் உற்பத் தியையும் அதிகரித்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் விற்பனையாளர் நல சங்கத்தினரும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *