கேரளா வயநாடு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டி

அரசியல் இந்தியா செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது. மேலும் காலியாகவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில் வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று கேரளாவில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளான பாலக்காடு, செலக்காரா ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *