எலான் மஸ்க் மீது அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் .

அரசியல் அழுகு குறிப்புக்கள் உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

அமெரிக்காவில் புதியதாக உருவாக்கப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவர் எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இந்த அமைப்பு தேவையற்ற அரசாங்க செலவுகளை அடையாளம் கண்டு அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பணிநீக்கங்கள் மற்றும் நிதி நிறுத்தங்கள் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொள்கிறார், இதற்கான எதிர்ப்பு போராட்டங்களில் நாட்டின் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிக அதிகாரத்தை எதிர்க்கும் வகையில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்நிலையில், “அமெரிக்க DOGE துறைக்கு எலான் மஸ்க்குடன் எந்த தொடர்பும் இல்லை” என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. இதற்கான ஆதாரமாக, வெள்ளை மாளிகை கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘அமெரிக்க DOGE துறைக்கு எலான் மஸ்க்கின் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் செயல்திறன் துறை, ஜனாதிபதியின் நிர்வாக அலுவலகத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. “எலான் மஸ்க்குக்கு துறையின் சார்பில் எந்த முடிவும் எடுக்க அதிகாரம் இல்லை. அவர் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக மட்டுமே உள்ளார்” என அந்த தகவல் கூறுகிறது. நீதிமன்றம் தெளிவுபடுத்தக் கோரியதைத் தொடர்ந்து, அரசு சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *