இந்தியாவில் தடம் பதிக்க்கும் டெஸ்லா நிறுவனம் .

இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது .இந்த தகவலை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் பேக்-எண்ட் குழுவுக்கான 13 வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு லிங்க்ட்இன் தளத்தில் காணலாம். ஸ்டோர் மேனேஜர், சர்வீஸ் மேனேஜர், கஸ்ட்மர் சப்போர்ட் எக்ஸிக்யூட்டிவ் போன்ற பணிகள் இதில் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பணியாற்ற வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். இந்திய சந்தையில் நுழைய விரும்பும் டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இறக்குமதி வரி போன்ற காரணங்கள் அந்த நிறுவனத்தின் இந்தியாவில் வருகையை தாமதமாக்கி வருகின்றன.சமீபத்தில் 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட உயர் தர சொகுசு கார்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை 110 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக குறைத்துள்ளனர். இதனால் நாட்டில் மின்சார சொகுசு கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆட் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தியாவில் மின்சார வாகன சந்தை மெதுவாக வளர்ந்து வரும் நிலைமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *