தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அரசியல் இந்திய வணிகம் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி ரியல் எஸ்டேட் வரும் நிகழ்ச்சிகள்

2025-26-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம், சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன்படி, தலைமைச் செயலக வளாகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 2025 மார்ச் 14-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9:30 மணிக்குக் கூடுகிறது. நிதியமைச்சர் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார்கள்” என்றார்.
அதேபோல 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *