பட்ஜெட் எதிரொலியில் சென்செக்ஸ் 900 புள்ளிகளை கடந்தது.

அரசியல் இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகிறது. இன்று காலை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான சூழ்நிலையில், பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி இருப்பது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். மேலும் இன்று (பிப்.1) காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 8-வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் எதிரொலியாக, பங்குச் சந்தை புள்ளிகள் இன்று உயர்வுடன் தொடங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *