பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது; கருந்துளை ஆராய்ச்சியில் இஸ்ரோ

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

புத்தாண்டு தினமான இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திராயன் திட்டங்கள் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரோ இந்தியாவுக்கு தேடி தந்தது. இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இஸ்ரோ.
இன்று காலை 9.10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, எக்ஸ்போசாட் செயற்கைக்கோல் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்டில் இருந்து எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்தது. இதையடுத்து செயற்கைக்கோளை பூமியில் இருந்து 650 கி.மீ., தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே செயற்கைக்கோளின் சோலார் தகடுகள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *