டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா; நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த அரவிந்தர் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.
” காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த உண்மையை வடகிழக்கு டெல்லி வேட்பாளர் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை.” என அரவிந்த் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முன்னாள் அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ராஜ்குமார் சவுகான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு அரவிந்தர் சிங் லவ்லியின் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *