இன்று நடைபெற்ற குவாலிபையர் 1 தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் இன்று குவாலிஃபயர் 1 போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். விராட் கோலி 12 ரன்களும், மயங்க் அகர்வால் 19 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் பிலிப் சால்ட் 27 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் 15 ரன்கள் எடுக்க 10 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்தது ஆர்சிபி அணி.

