தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 25, 2025) தொடங்கிய நிலையில் மும்பை, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் நிலையில் நாளை (மே 27) 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை மீட்டனர். கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நேற்று மும்பை புனேவில் உள்ள பாராமதி மற்றும் இந்தாபூர் தாலுகாக்களில் கனமழை பெய்ததால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மாவட்ட ஆட்சியரின் அவசர வேண்டுகோளின் பேரில் தேசிய பேரிடர் மீட்புப் படை சிறப்பு குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும் பெங்களூருவில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடகாவின் மங்களூரு, நுஜிபால்தில் மற்றும் கடபா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை காரணமாக கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மங்களூரு மற்றும் உல்லாலில், கடுமையான மழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .

