சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு மற்றும் மது ஒழிப்பு உள்ளிட்ட பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மேலும் கொள்கைகளை உறுதியாக பின்பற்றும் நோக்கில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அதில் கொள்கைகளை உறுதியாக பின்பற்றும் தீர்மானத்தில் ஒரு இயக்கத்தின் வளர்ச்சி, வேகம் மற்றும் விவேகம் என்பது அதன் கொள்கைகள் மற்றும் கொள்கைத் தலைவர்களை உறுதியாக பின்பற்றுவதில் அடிப்படையாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இதனை நன்கு புரிந்து கொண்டு, தனது கொள்கைத் தலைவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் இயக்கமாக அமைந்துள்ளது என கூறப்பட்டது. அடுத்ததாக மாநாட்டை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்றதன் மூலம், தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த மாநாட்டின் வெற்றிக்கு, இடம் தேர்வு, திடல் பணிகள் மற்றும் மாநாட்டின் அனைத்து செயல்பாடுகளுக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம் , ஜனநாயகக் கொள்கை தீர்மானம், பெண்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம், சமூக நீதிக் கொள்கை தீர்மானம், மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம் , விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம், கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம், ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம், மொழிக் கொள்கை தீர்மானம் , மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம், மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம் , மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம், உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்,தமிழ்நாட்டின் தொன்மப் பெருமைப் பாதுகாப்புத் தீர்மானம்,விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம், கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம், முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம், இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் போன்ற 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

