இந்தியாவிற்கு வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று இந்திய தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார். அப்போது பில்கேட்ஸ் மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ ஒன்றினை மும்பை சாலையில் ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு கூறியிருப்பதாவது: ‛ இது இனி பில்கேட்ஸ் கார்’… இதை ஓட்டிப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை பில்கேட்ஸ் இந்தியா வரும் போது சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் தான் ‛ ட்ரியோ ஆட்டோ ரிக்ஷா’ பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்