ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை; மின்சார வாரியம் தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வானிலை

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.
சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி ஒரே நாளில் 5,979 மெகாவாட்(MW) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5,704 மெகாவாட்டை (02.08.2024) மிஞ்சியுள்ளது. மேலும், 41.40 மில்லியன் யூனிட்(MU) மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் முதன்மையை உறுதிப்படுத்துகிறது”