பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 57 பயணிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் வோபாஸ் என்ற விமானம், காஸ்காவெல் நகரில் இருந்து சாவோ பாவுலூ நகரில் உள்ள கவுருல்ஹோஸ் விமாநிலையத்திற்கு 57 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்டது. அப்போது வின்ஹெடோ என்ற இடத்தில் வானில் சிறிது நேரம் வட்டமடித்த விமானம், திடீரென்று சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
விமானம் தீப்பற்றி எரிந்ததில், 57 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் சில்வா, விமான விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார். மேலும் சாவோ பாவுலூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.