தென்மேற்கு பருவமழை – வரலாறு காணாத வெள்ளம்

இந்தியா தமிழ்நாடு முதன்மை செய்தி

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்தாண்டு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மழையின் அளவு அதிகமாக இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் மிகவும் அதிகமாக இருப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் மழை மிகுதியாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்தில் மழை அனைத்து பகுதிகளிலும் தீவிரம் அடைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவீரம் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில மாவட்டாங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை 137அடியை எட்டிவிட்டதால் வெள்ளிக்கிழமை(இன்று) நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதே போல் இடுக்கி அணி நிறம்பும் தருவாயில் உள்ளதால் எந்நேரமும் திறக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரதான நதியான காவிரியிலும் நீர்வரத்து அதிககரித்துள்ளதால் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் இருக்கும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியதால் அந்த இரண்டு அணைகளிலும் நீர் வெளியேற்றப்பட்டன. இதனால் தமிழகத்தின் மேட்டூர் அணை முழு அளவான120 அடியும் நிரம்பியது. மழையின் அளவு சற்று குறைந்ததால் நீர் வரத்து குறைக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் 2லட்சம் கன அடி அளவிற்கு கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்ட்டன. நீர் வரத்து மொத்தமும் மேட்டூர் அணையை வந்தடைய அணையின் பாதுகாப்புக் கருதி அதை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடியாக ஆரம்பித்த நீர் வரத்து 2 லட்சத்திப் பத்து, 2 லட்சத்தி முப்பது என அதிகரித்த வண்ணம் இருந்தது. காவிரி கரையோரமுள்ள அனைத்து மாவட்ட கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீரின் அளவு கட்டுக்கடங்காமல் போக பல கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. வெள்ளியன்று காலை காவிரியாற்றில் நிறந்துவிடும் நீரின் அளவு 1 லட்சத்தி எழுபதாயிரமாக குறைக்கப்பட்டது.
ஏற்கனவே கேரளவில் மழை தீவிரம் காட்டி வரும் நிலையில் கர்நாடகாவிலும் மழை நிற்காமல் பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வீடுகளை அடித்துச் சென்றும், விளை நிலங்களில் நீர் புகுந்தும் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.