தமிழக மீனவர்களின் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்.

அரசியல் இலங்கை உலகம் செய்திகள் தமிழ்நாடு

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடி படகு, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்திவழி ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று, நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பகுதியில் அந்நாட்டு மீனவர்களால் கைப்பற்றப்பட்டனர். வல்வெட்டுத்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றம் 4 மீனவர்களை விடுவித்து, பைபர் படகையும் அதில் உள்ள உபகரணங்களையும் நாட்டுடமையாக்கியுள்ளது. இந்நிலையில், நாட்டுடமையாக்கப்பட்ட படகு, மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஜிபிஎஸ் கருவி ஆகியவை பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. இவை தனித்தனியாக மொத்தமாக இலங்கையின் மதிப்பில் 5,60,100 ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.1,65,000) பொதுவாக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *