தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பரவியதால் 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

ஆரோக்கியம் இந்தியா சிறப்பு செய்திகள் மருத்துவம்

தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில், கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் உயிரிழந்தன, இதற்கான காரணமாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலத்தின் எல்லைகளில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, ஆந்திர மாநிலத்திலிருந்து கோழிகளை தெலங்கானா மாநிலத்திற்குள் அனுமதிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் கம்மம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து, வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் போன்ற மாவட்டங்களில் பண்ணை கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், தெலங்கானா மக்களும் கோழி இறைச்சி உண்பதை தவிர்க்கத் தொடங்கினர். கடந்த நாளில் சங்காரெட்டி மற்றும் மேதக் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8,000 பண்ணைக் கோழிகள் உயிரிழந்துள்ளன, இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, இறந்த கோழிகளின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *