ராம், ஜானு’வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.
தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் வெளியாகிறது. ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போதும், பாடல்கள் இசைக்கப்படும்போதும் ரசிகர்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கிடைக்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப ‘96’ திரைப்படம் பிப்ரவரி 14, 2024 காதலர் தினத்தன்று மீண்டும் வெளியாக இருக்கிறது. கேஎம் சுந்தரம் பிக்சர்ஸ் இந்தப் படத்தினை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் அதிக திரைகளில் வெளியிடுகிறார்கள்.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் கூறும்போது, “’96’ திரைப்படம் வெறும் கிளாசிக் மட்டுமில்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. நாங்கள் இந்தப் படத்தைத் தயாரித்தபோது, பார்வையாளர்களுக்கு ஒரு கவித்துவமான காதல் கதையைக் கொடுக்க விரும்பினோம். ஆனால், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு அன்பை இந்தப் படத்திற்குக் கொடுத்தனர். படத்திற்கான புரோமோ ஒன்றில் ஒரு ரசிகர் பதிவிட்ட கமெண்ட் ஒன்றை மறக்க மாட்டோம். அதாவது, ‘’96’ படத்தில் இருந்து சில ப்ளூப்பர்களை கொடுங்கள். அப்போதுதான் ‘96’ ஒரு திரைப்படம் என்பதையே எங்களால் நம்பமுடியும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த காதலர் தினத்தில் தமிழகம் முழுவதும் ’96’ திரைப்படம் அதிக திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

