செவாலியர் விருதை பெற்றுக் கொண்ட கலை இயக்குநர் தோட்டா தரணி; பிரஞ்ச் அரசின் உயரிய கவுரவம்

இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” விருது அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார். இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் ‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *