பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா, புதுப்பிக்கப்பட்ட பார்சிலோனா கால்பந்து க்ளப் கேம்ப் நௌ மைதானத்தின் முன்பாக லயோனல் மெஸ்ஸியின் சிலை நிறுவப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். க்ளப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய வீரராகக் கருதப்படும் மெஸ்ஸிக்கு, யோஹான் குரஃப் மற்றும் குபாலா போன்ற சிறந்த ஆளுமைகளின் சிலைகள் அருகே மெஸ்ஸியின் சாதனையை போற்றும் வகையில் சிலை அமைக்கப்பட உள்ளது. சிலையின் வடிவமைப்பு குறித்து தற்போது அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்; மேலும் மெஸ்ஸியின் குடும்பத்தினரின் ஒப்புதல் பெறப்பட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என லபோர்டா தெரிவித்துள்ளார்.

