பிரபல தமிழ் சினிமா இய்க்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மறைவு/இரங்கல் மற்றவை முதன்மை செய்தி

தமிழ் திரைப்பட. இயக்குநர், நடிகர் பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் மனைவி பூர்னிமா, மகன் சாந்தனு மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வெள்ளாங்கோயில் எனும் கிராமத்தை பூர்வீகமான கொண்ட பாக்யராஜ் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தவிர்க்கமுடியாத இயக்குநர்களில் ஒருவர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குதராக பணிபுரிந்த இவர், முந்தானை முடிச்சு, புதியவார்ப்புகள், இது நம்ம ஆளு போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர். இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் 70க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்குறார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தன் கலையுலக வாரிசு என பாக்யராஜ் அவர்ளை அறிவித்தது தமிழ் திரையுலகில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இரு வாரங்களுக்கு முன் தன் குரு பாரதிராஜா இறந்தபோது நேரில் சென்று இரங்கலை தெரிவித்திருந்தார். தற்போது இவர் மண்ணுலகை விட்டு மறைந்திவிட்டார். இரு நாட்களுக்கு முன்பு இவர் கோவாவில் நடிகை குஷ்பு சுந்தரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். இதுவே பாக்யராஜ் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். இன்று காலை வாக்கிங் சென்ற அவர், மாரடைப்பார் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என குடும்பத்தினர் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *