உலக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற தமிழ்நாடு முதல்வர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா வருகை

அரசியல் இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வேலைவாய்ப்புச் செய்திகள்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத் தார். பிறகு நடைபெற்ற சந்திப்பு களின்போது, பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டி ஸின் பன்னாட்டு மற்றும் நிறு வனத் தொடர்பு தலைமை அதி காரி லாரா பெர்ஜானோ, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது.
ஆக்சியானா நிறு வனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவ னங்களுடன் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன. ஸ்பெயின் பயணத்தை முடித் துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7.2.2024) காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னைக்கு புறப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளேன். சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *