தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளார்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மாநாடு முதன்மை செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற தலைப்பில் முதல் மாநில மாநாடு நேற்று மிகச் சிறப்பாக ,பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டின் நிகழ்வுகள் ஆரம்பமானது. மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் இன் தொடங்கின. .4 மணிக்கு மேடையில் வந்த விஜய், தொண்டர்களை பார்த்து உற்சாகமாக தன் வணக்கத்தை தெரிவித்தார். பின்னர், கூட்டத்தின் மையத்தில் 800 மீட்டர் நீளமான ‘ரேம்ப்’ மீது நடந்து சென்றார். தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை அணிந்து கொண்டார் அதன் பிறகு, மேடையில் அமைக்கப்பட்ட காமராஜர், பெரியார், திருப்பூர் குமரன், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், தியாகி அஞ்சலை அம்மாள் ஆகியோர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். “தமிழன் கொடி பறக்குது” என்ற கட்சியின் பாடல் ஒலிக்க, 100 அடி உயர கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியை விஜய் ஏற்றிவைத்தார். கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி கூற , விஜய் மற்றும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கொள்கைகளை பற்றி விஜய் கூறியதாவது, “நம் கொள்கைகளின் அடையாள தலைவர்களாக பெரியார் இருக்கிறார். ஆனால், அவர் கூறிய கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது நமது கொள்கை.” மேலும், நேர்மையான நிர்வாகத்தை வழங்கிய காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிகு பெண்களான வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர் நமது கொள்கை தலைவர்களாக உள்ளனர்.நமது அரசியல் நிலைபாடாக கூறியது, பிரிவினைவாத சித்தாந்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் தனது கருத்தை அறிவித்தார். எங்கள் அரசியல் பயணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்கும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது அரசியல் நோக்கம். நான் சினிமா உலகத்தை விட்டு உங்களை நம்பி வந்துள்ளேன் என்றும், பெண்கள், குழந்தைகள், கல்வி, மருத்துவம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றின் பாதுகாப்பு நமது செயல்திட்டங்களில் முதன்மையானது மற்றும் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் மக்களுடன் இணைந்து நாங்கள் களத்தில் செயல்படவுள்ளோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் நம்மை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்வார்கள். மக்கள் ஒற்றை விரலில் வாக்களிக்கும் போது, நமது அரசியல் எதிரிகள் மீது ஜனநாயக முறையில் தாக்குதல் நடத்துவார்கள் என்று தனது கட்சியின் கொள்கை, நிலைபாடு ஆகியவற்றை விஜய் கூறினார். மேலும் கூட்டணி தொடர்பாக கூறியதாவது, நமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வரும் அனைவருக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கீடு செய்யப்படும் என அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் , பொது மக்கள் மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *