தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: விஜய் அறிவிப்பு

அரசியல் சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாளிலிருந்து, நம் கழகத் தோழர்களின் எண்ணங்களைப் பின்பற்றியும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை உருவாக்கும் வகையில், நமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27-ம் தேதி, மாலை 4 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த மாநாடு, நமது வெற்றிக் கொள்கைகளையும் , எதிர்கால இலக்குகளையும் விளக்குவதற்கான பெருவிழாவாகவும் இருக்கும் . தமிழக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்த மாநாட்டின் மூலம் நமது கொள்கைகள் மக்களின் மனதில் உறுதியாக நிலைபெறும் எனவும், மேலும் இது தமிழக மக்களின் நலனுக்காக நமது கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும். தமிழக மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த மாநாடு இருக்கும் என நம்புகிறேன் என அறிக்கையை விஜய் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *