திமுக முக்கியத் தலைவர் சொத்துப் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் – பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

அரசியல் செய்திகள் தமிழ்நாடு

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, 13 தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் ரூ. 2,00,000 கோடி சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரபேல் கைகடிகாரம் உங்களுக்கு பரிசாக கிடைத்தது என்று தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். இதுகுறித்து, தங்கள் கருத்து என்னவென்று பத்திரிகையாளர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேட்டனர். அதற்கு, அவர், கூறியதாவது
என்னிடம் பில் கேட்பவர்கள் யார்? ஏப்ரல், முதல் வாரத்தில் நான் பில் கொடுக்க தான் போகிறேன். இன்றைக்கு தான், 75 வருட அரசியல் வரலாற்றில், ஒரு சாமானிய மனிதனை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஐயாவை பார்த்து கேள்வி கேட்டார்கள். இன்றைக்கு, 2-வது முறையாக சாமானிய மனிதனை பார்த்து ஆளும் கட்சி கேள்வி கேட்க துவங்கியிருக்கு.
நான், பில்லை நிச்சயம் மக்கள் மன்றத்தில் வைப்பேன். முதலமைச்சர் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் சொத்து பட்டியலை நான் தயார் செய்து வைத்து இருக்கிறேன். இப்பவே, கிட்டதட்ட ரூ. 2 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இன்ஜீனரியங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், இந்தோனேஷியாவில் உள்ள துறைமுகம், முதல்வர் பயன்படுத்த கூடிய பொருட்கள் லண்டன் மற்றும் துபாயில் உள்ள கம்பெனி விவரங்கள் விரைவில் வெளிவரும்.
தி.மு.க. எங்களை தொட்டு விட்டது. இதற்கு, முடிவுரையை பா.ஜ.க. எழுதும். கரூரில், செந்தில் பாலாஜிக்கு உள்ள 650 ஏக்கர் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிடுவேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்ககப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.