இந்தியாவின் மொத்த பொருளாதார மதிப்பில் ரூ.10,000 கோடி யூடியூபர்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகள் போன்ற முதன்மை ஊடகங்கள் கூட (Mainstream Media) சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் எனும் வலைக்காட்சி ஊடகத்தை புறக்கணிக்க முடியாத அளவுக்கு அவை பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதிலும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் உலகை ஆட்டிப் படைத்த காலத்தில், ஏற்பட்ட பொது முடக்கத்தின்போது, யூ டியூப் எனும் வலைக்காட்சி ஊடகத்திற்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.
அதுவரையில், வலைக்காட்சிகளை (யூடியூப்) பார்க்காமல் இருந்தவர்கள் கூட அதன் செல்வாக்குக்கு அடிமை ஆனார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் ரூ.6,800 கோடியாக இருந்த யூடியூபர்களின் பங்கு, 2021-ல் ரூ.10,000 கோடியாக உயர்ந்துள்ளது. 7.5 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு தந்ததற்கு இணையான வேலை வாய்ப்பை யூடியூபர்கள் உருவாக்கியுள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.