சென்னை மழைநீர் வாடிகால் பணிகள் குறித்து அமைச்சர் நேரு அளித்த புள்ளிவிவரங்கள்; உண்மைதன்மை என்ன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

சென்னையில் உண்மையாக எத்தனை சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ள அண்ணாமலை, கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டியுள்ளார். 98% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், தண்ணீர் தேங்கினால் ஒரு மணி நேரத்தில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பேட்டியில் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், 20 சென்டி மீட்டர் மழை பெய்தால் கூட, தேங்கிய தண்ணீர் ஒரு மணி நேரத்தில் வடிந்துவிடும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியில் தெரிவித்திருந்ததை அண்ணாமலை வெளியிடுள்ளார்.
இதனுடன் சேர்த்து, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து இன்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதில், மொத்தம் 42% பணிகள் மட்டுமே நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு, அமைச்சர் கே.என்.நேரு முரண்பாடாக பேசியிருப்பதாக குறிப்பிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் மழை வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய பிறகாவது தமிழ்நாடு அரசு உண்மையைப் பேசுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *