தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ல் தொடங்குகிறது; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என கூறினார்.மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024ஆம் நாள் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்.2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும். மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்றும், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள் புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *