பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர்கள் 27 பேர் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர். நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.
