பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

அரசியல் இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம் முதன்மை செய்தி வேலைவாய்ப்புச் செய்திகள்

அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராகப் பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்தியாவில் இது தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு ஒரு தகுதிக்கான தேர்வு ஆகும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாயிஷ் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கவும், அதேப்போன்று பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு அதாவது டெட் கட்டாயம் ஆகும். இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். அதே நேரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்காக ஆசிரியர் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்வு பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் வேலைவிட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *