மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை ஆணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நாளை மறுநாள் 21-ஆம் தேதி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23-ல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அணையில் உள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரையை விரைவில் சென்றடையும் வகையில், வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை வைகை பொதுப்பணித்துறையினர் திறந்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *