தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை புரட்டிப்போட்டது. கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் பாதித்த பகுதி மக்களுக்கு, நெல்லை மாநகரில் வைத்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். முதல் கட்டமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி நகரில் இருந்து 400க்கும் மேற்பட்டோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருநெல்வேலிக்கு அழைத்துச்சென்றனர். தூத்துக்குடியில் இருந்து 27 வேன்கள் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

