பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

இந்தியா உலகம் ஐரோப்பா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விண்வெளி சார்ந்தவை

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை புதன்கிழமை மாலை 4.08 மணிக்கு இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த இரண்டு செயற்கைகோள்களையும் முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்தில், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும். ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.08 மணிக்கு ஆரம்பமாகும். இந்த கவுண்ட்டவுன் முடித்த பிறகு, நாளை புதன்கிழமை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *