இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இயற்க்கை சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் இன்று ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *