சமீபத்தில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வுகளை ‘நெட்பிலிக்ஸ்’ நிறுவனம் வீடியோ பதிவுகளாக வெளியிட்டது. நடிகர் தனுஷ், ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற காட்சிகள் தனுஷ் அனுமதியின்றி நெட்பிளிக்ஸ் வெளியிட்ட நயன்தாரா திருமண வீடியோவில் பல இடங்களில் வந்துள்ளது இதான் காரணமாக காப்புரிமை மீரலுக்காக, ரூ10 கோடி இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். எதன் காரணமாக நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். மேலும் நடிகை நயன்தாரா , விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘நானும் ரவுடி தான் படத்தில் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் வரும் நயன்தாராவின் நடிப்பு மற்றும் குரல் எங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ காட்சிகளுடன், நயன்தாராவின் திருமண வீடியோ பதிவை வெளியிட்டதால், தனுஷ் தரப்பில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இழப்பீடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நெட்பிலிக்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தனுஷுக்கு எதிராக தாக்கல் செய்தது.இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் , இந்த மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. ‘சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்து விட்டது. இந்த உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவுவிட்டுளார்.
