உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் 2056ஆம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு திருக்குறள் வாழ்த்து பாடல் பாடி இனிதே தொடங்கப்பட்டது, இதில் திருக்குறள்ஞானமன்ற தலைவராக பேராசிரியர் தஸ்தகீர் தலைமையேற்றி விழாவை நடத்தினார். செயலர் புலவர்.விஸ்வநாதன் வரவேற் ப்புறை ஆற்றினார். மேலும் திருக்குறள் உரையாசிரியர் எம். ஆர். இரகுநாதன், பேராசிரியர் இராஜசேகர், பேராசிரியர் அபுல்பாசல், பாவேந்தன் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உடையார் பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் மற்றும் காவல்துறை ஆய்வாலர் விஜயலெட்சுமி கலந்து கொண்டனர். திருக்குறள் எழுதும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி உலகபொதுமறை திருக்குறளை அனைவரும் படித்து அதன்வழி நடக்கவேண்டும் என்று வாழ்த்து கூறினர். மேலும் தமிழக அரசு குமரியில் நடத்திய திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் சி. பன்னிர்செல்வம் அவர்களுக்கு திருக்குறள் தகைமையாளர் விருது, பரிசு தொகை முதலமைச்சர் கையால் பெற்றதை இந்நிகழ்வில் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. மேலும் திருக்குறள் பறப்புரையாளர் சங்கிதா கண்ணன் கலந்து கொண்டு திருக்குறள் வாழ்வில் ஓர் அங்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் . இந்த நிகழ்வில் இராஜேந்திரன், பத்மா, கலைச்செல்வி, ஹரிசுந்தரராஜன், மாரிமுத்து லயன் பாபு, இரவி என ஆசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் கவுன்சிலர் பிரபாகர், சங்கர், தமிழழகன், அருண், பரணிதரன் மற்றும் தமிழ் ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில், தமிழாசிரியர் இராமலிங்கம், வான்சிறப்பு அதிகார குறள்பாடி நன்றியுரை ஆற்றினார். திருவள்ளுவர் தின விழா இனிதே நிறைவு பெற்றது.

