திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதியான இன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .கோவில் ராஜகோபுரம், கிழக்கு கோபுரம் மற்றும் கோவில் பிரகாரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் யாகசாலை மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாக சாலை பூஜைகளில் 108 ஓதுவார் மூர்த்திகளால் தமிழ் மறைகள் ஓதப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா இன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரத்தில் அமைந்துள்ள கும்ப கலசங்களுக்கு தமிழ் மறைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது . அதே நேரத்தில் கோவில் விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, சன்னதி கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு முடிந்த பின்னர் 20 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவை காண்பதற்காக லட்சக்கணக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து பங்கேற்றனர். லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *