இந்த வாரச் சின்னத்திரை

சின்னத்திரை செய்திகள்

ஒவ்வொரு வாரமும் சுவையான சின்னைத்திரை துணுக்குகளை உங்களைத் தேடிக் கொண்டு வந்துச் சேர்ப்பதே “இந்த வாரச் சின்னத்திரை” தொகுப்பு. சின்னத்திரை உலகின் இந்த வார சுவாரசியங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காண்போம்

கொரொனா சீரியல் மற்றும் திரைப்படப் படபிடிப்புகளை வெகுவாக பாதித்துள்ளது. அதன் காரணமாக பல முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் தாங்கள் ஒளிபரப்பி வந்த தொடர்களை நிறுத்தி, மக்களிடையே வரவேற்பை பெற்ற பழைய தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி அதன் இரு பிரதான தொடர்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி – 2 ஆகிய இரு தொடர்களின் ஒளிபரப்பையும் நேற்றோடு நிறுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் அஷ்வின். இவருக்கென்று ஒரு தனி ரசிகைகளின் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அவர் சமீபத்தில் தான் இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், இரண்டு முறையும் நம்பிக்கையோடு இருந்து மீண்டதாகவும், இந்த கடின காலத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெகு விரைவில் கடப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் கடந்த வாரம் ஹாட் ஸ்டாரில் வெளியான “நவம்பர் ஸ்டோரிஸ்” தொடர் இரசிகர்களிடையே ப்ளாக்பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. ஏழு தொகுதிகளை கொண்டுள்ள க்ரைம் திரில்லரான இது விறுவிறுப்பான கதைகளத்தாலும், சிறந்த நடிப்பாலும் அனைவரையும் வெகுவாய்க் கவர்ந்து வருகிறது.

கடந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பான மெர்சல் திரைப்படம் டிஆர்பியில் முதலிடம் பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் சன் டிவி ஒளிபரப்பிய நடிகர் விஜயின் ஜில்லா திரைப்படமே டிஆர்பியில் முதலிடம் வகிக்கிறது. நடிகர் விஜயின் திரைப்படங்களை எப்போது ஒளிபரப்பினாலும் அவையே டிஆர்பியில் முந்துவதால் டிஆர்பி கிங் என அழைக்கப்பட்டு வருகிறது.

சேனல்களுக்கான இந்த வார டிஆர்பியில் ஜீ தமிழ் பெரும் சறுக்கலைக் கண்டுள்ளது. சன் டிவி தொடர்ந்து முதலிடத்திலும், விஜய் டிவி தொடர்ந்து இரண்டாவது இடத்திலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இடத்தை கே.டிவி பிடித்துள்ளது.

தனித்திருப்போம்!!! கொரோனாவை ஒழித்திருப்போம்!!!

Leave a Reply

Your email address will not be published.