சீனா அதிபர், அமெரிக்காவின் வரி விதிப்பின் புதிய விதிகள் சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகக் கண்டித்து கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் நோக்கில், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். வெள்ளை மாளிகையின் அறிவிப்பு போல, நெருக்கடிகள் குறையும்வரை இந்த வரி விதிப்புகள் தொடரும். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக, கனடா அதிபர் ஜஸ்டின் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாக கூறினார் . இதேபோல், மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூறியுள்ளது.இந்த சூழ்நிலையில், சீனா இந்த விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரண்டு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும்” எனக் கூறியுள்ளது.

