பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும்; தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அறிவிப்பு

இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. Hபிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. பிளஸ் 2 தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளும் எழுதினர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *