ஆப்ரேஷன் தியேட்டரில் மருத்துவர் ஒருவர் திருமண போட்டோஷூட் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் அபிஷேக் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார். தனது திருமணத்துக்கு முந்தைய போட்டோஷூட்டை புதுமையாக எடுக்க விரும்பிய அவர், எடுத்த போட்டோஷூட் தற்போது அவரின் வேலைக்கு வேட்டு வைத்துள்ளது.
பயன்பாட்டில் இல்லாத அரசு மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், அபிஷேக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்றும் அந்த மாநில சுகாதாரத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் , மருத்துவ மாணவர்கள் ரீல்ஸ் எடுத்த வீடியோ வைரலானது. இந்நிலையில், 38 மாணவர்களையும் பணியிடை நீக்கம் செய்து கடக் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

