நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோயிலின் கதவுகள் மூடப்படும். பின் 29ஆம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும். மேலும் சந்திர கிரகணமானது, 29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடைகிறது.
இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் வரும் 28 ஆம் தேதி நள்ளிரவில் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் இங்கு தோஷ காலம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிரகணம் நிகழும் நேரத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

