குப்பையாக காட்சியளிக்கும் டிவிட்டர் தலைமையகம் – என்ன நடக்கிறது எலான் மஸ்க் நிர்வாகத்தில்..?

அரசியல் உலகம் செய்திகள் மற்றவை வட அமெரிக்கா

டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் அதன் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் . டிவிட்டரை வாங்கியதும் அதன் ஊழியர்களின் சரி பாதிக்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோவில் டிவிட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார். இதனால் அதன் ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். 
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வ மறுக்கப்பட்டதால் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் டிவிட்டர் தலைமையகம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. 
கழிவறைகளும் சுத்தம் செய்யாமல், மீதமான உணவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். கழிவறைக்கு ஊழியர்கள் சொந்தமாக டாய்லெட் பேப்பர்களை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.