போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்துள்ள புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் மற்ற பாதியார்களுடன் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீருடன் இருப்பதாகவும், ஆரோக்கியம் மேம்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம் போப் பிரான்சிஸ் பின்னால் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படத்தில் போப் பிரான்சிஸ் ஊதா நிற சட்டை அணிந்து, பலிபீடத்தின் முன் உள்ள சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதை காணலாம்.கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்ட பிறகு, வெளியான முதல் புகைப்படமாகும். போப் பிரான்சிஸ் (88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று இருப்பது உறுதியாகியது தற்போது அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் வழங்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
