அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத் மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா ராய் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கீர்த்தி ஆசாத் எழுத்து மூலம் பதிலளித்தார். 2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தி, அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.மேலும் வர்த்தக விமானங்கள் மற்றும் வாடகை விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணமாக, போதிய ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அமைச்சர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

