நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த மாதத்தில் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 25 நாட்களை கடந்து இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியிலும் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நெட்ஃபிளிக்சில் தொடர்ந்து முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் பட குழுவினர் மிகப்பெரிய உற்சாகத்தில் காணப்படுகின்றனர். திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்தது போலவே மகாராஜா படம் தற்போது ஓடிடியிலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே தங்களது ஆதரவை கொடுக்க தவற மாட்டார்கள் என்பதை மகாராஜா தற்போது நிரூபித்துள்ளது.
