சேலம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் காவேரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 6500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதினால் 4000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்து வருவதினால் கபினி கிருஷ்ணராஜா சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1552 கன அடியாக நீர்வரத்து இருந்து வந்த நிலையில் நேற்று 1௦௦௦ கனடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைவாகவே உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் காவேரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.காவிரி நதி நீர் தமிழகத்திற்கு வருவதே கேள்விக்குறியாக இருக்கும் நிலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை கண்டுள்ளது.

