உலகின் தலைசிறந்த வல்லரசு நாடுகள், உலகின் தலைசிறந்த அதிசயங்கள் என வரிசைப்படுத்தி பார்ப்பது வழக்காமான ஒன்று. அதுபோல உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. பணக்காரர்கள் என்றால் முதலில் லட்சங்களில் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது பிறகு கோடிகளில் இப்போது பில்லியன்களில் கணக்கிடப்படுகிறது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு, அவர்கள் செய்யும் தொழில், வணிகம் போன்றவைகளை தெரிந்துகொள்ள உலகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல இந்தாண்டு பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. யார் யார் முதல் 10 இடங்களில் உள்ளனர் என்று பார்ப்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். பெரும்பாலும் அமெரிக்க வாழ் வணிகர்களே அதிக சொத்து மதிப்பு உடையவர்களாக இருப்பார்கள். இந்த முறை ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் முதல் மூன்று இடங்களில் ஒருவராக இருக்கிறார் என்பது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அமெரிக்காவின் எலோன் மஸ்க் 251பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 153பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். முதல் இரண்டு இடங்களையும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பிடிக்க, ஆசியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் முதல் மூன்று இடத்தில் வருவது வரலாற்றில் இதுவே முதன்முறை.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 117 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5ம் இடத்தில் இருக்கிறார்.